Saturday 28 October 2017

சென்ற வார உலகம்


ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே மீண்டும் தேர்வு 

 ஜப்பான் நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஷின்ஷோ அபே மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார், அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஷின்ஷோ அபேக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் வட கொரியாவுக்கு எதிரான ஜப்பானின் செயல்பாடுகள் இன்னும் தீவிரம் அடையும் என்று தெரிகிறது.



ரஷ்ய ஏவுகணை சோதனை 

சாத்தான் -2 என்று அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பாய்ந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணை உட்பட நான்கு ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதில் சாத்தான் -2 என்று அழைக்கப்படும் RS-12M ஏவுகணை 16 அணு ஆயுதங்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒரு முறை இதனை யுத்தத்தில் பயன்படுத்தினால் ஒரு கண்டமே உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய் விட கூடிய அபாயம் உள்ளது.


இந்தோனேசியா பட்டாசு ஆலையில் தீ விபத்து 

இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் பற்றிய தீயில் சிக்கி 47 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர், இந்த விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பெண் தொழிலாளர்கள் என்றும், மருத்துவமனைகளில் தீகாயத்துடன் சேர்க்கப்பட்ட பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் இந்தோனேசியாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


சி ஜின்பிங் - மா சே துங் கிற்கு  பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்
- சீன அரசாங்கம்  அறிவிப்பு 

சீன அரசாங்கம் மா சே துங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக சி ஜின்பிங்-ஐ அறிவித்துள்ளது. இரண்டு முறை சீனாவின்  அதிபராக பதவி வகித்துள்ள சீன அதிபர் சி ஜின்பிங் மிக சிறந்த கம்யுனிஸ்ட் தலைவராக உருவெடுத்துள்ளார், அவரது சோசியலிச கொள்கைகளும், கருத்துக்களும் அந்நாட்டு பல்கலைகழக பாட நூல்களிலும் இடம் பெற இருக்கிறது.

பறக்கும், நீந்தும் ரோபோ - ரோபோபீ - ஹாவர்ட் பல்கலைகழக கண்டுபிடிப்பு

 கணினி கண்டுபிடிக்கப்பட்ட போது அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் போன்று தெரிந்தது, பின்பு மெல்ல மெல்ல அளவு குறைந்து கொண்டே போய் பர்சனல் கம்ப்யுட்டர், மடிகணினி என்று இப்போது கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் கையடக்க ஸ்மார்ட் போனில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதே கதை இப்போது ரோபோக்களிலும் நடக்க துவங்கியுள்ளது, மிக சிறிய வடிவத்தில் ரோபோக்கள் இப்போது உருவாக்கி வருகின்றனர். ஹாவர்ட் பல்கலைகழகம் உருவாக்கியுள்ள ரோபோபீ என்ற ரோபோ வானில் பறக்கும், நீரில் மிதக்கும், நீந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்