Monday, 9 September 2019

டிவிட்டரில் இஸ்ரோவை தட்டி கொடுத்த நாசா


ந்தியாவின் நிலவுப் பயணமான சந்திராயன்-2 குறித்து கடந்த சனிக்கிழமையன்று நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ நிலவுக்கு சந்திராயன்-2 என்ற ராக்கெட் அனுப்பி அதில் இருந்து விக்ரம் லேண்டர் சாதனத்தை நிலவில் இறக்க முயற்சி செய்தபோது, நிலவின் தென் துருவத்திற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் சாதனத்திலிருந்து கட்டுபாட்டு மையத்திற்கு வந்த சிக்னல்கள் தொடர்பு நின்று போனது, இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கண்ணீர் விட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான சிவன் அவர்களை நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கட்டித்தழுவி அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில்: "விண்வெளி என்பது கடினமானது, நிலவின் தென்துருவத்தில் இறங்க முயற்சி செய்த இஸ்ரோவின் சந்திராயன் 2  பயணத்தை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியாவின் விண்வெளி பயணம் எங்களுக்கு உற்சாகமூட்டுகிறது. மேலும் வருங்காலத்தில் நமது சூரிய மண்டலத்தை நாம் ஒன்றிணைந்து ஆராய வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்." என்றும் அந்த டிவீட்டில் நாசா தெரிவித்துள்ளது.


நாசா மட்டுமல்ல, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகமான State_SCA டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில்: "# சந்திரயான் 2 இல் அளப்பரிய  முயற்சிகளுக்காக @ISRO ஐ வாழ்த்துகிறோம். இந்த பயணம் இந்தியாவுக்கு ஒரு பெரிய முன்னேற்ற படியாகும், மேலும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஊக்கம் தரும் மதிப்புமிக்க தரவைத் தொடர்ந்து தயாரிக்கும். இந்தியா தனது விண்வெளி அபிலாஷைகளை எட்டும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. AGW"  என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகெங்கும் இருந்து இஸ்ரோவின் நிலவுப் பயணமான சந்திராயன்-2 முயற்சியை ஊக்குவித்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்  விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ள இஸ்ரோ மீண்டும் விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் தொடர்பை பெற தொடர்ந்து முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 7 April 2018

தென் கொரியா அலுவலகங்களில் ஏழு மணிக்கு கணிணியை நிறுத்த அரசு உத்தரவு


நேரங்காலம் தெரியாமல் கடுமையாக உழைக்கும் (வேலை பார்க்கும்) மக்கள் நிறைய பேர் தென் கொரியாவில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தென் கொரியர்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் 2,739 மணி நேரம் செலவிடுவது தெரிய வந்துள்ளது, இது வளர்ந்த நாடுகளில் இருக்கும் வேலை நேரத்தை விட கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு ஆயிரம் மணி நேரம் அதிகமாக உள்ளது.    

தென் கொரியர்களின் கடமை உணர்ச்சியை படிப்படியாக கட்டுபடுத்த தென் கொரிய அரசாங்கம் மூன்று கட்டமாக புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக, கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் அலுவலகங்களில் வெள்ளிகிழமைகளில் இரவு எட்டு மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிகிழமைகளில் இரவு ஏழு முப்பது மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும், இறுதி கட்டமாக வரும் மே மாதம் முதல் வெள்ளிகிழமைகளில் இரவு ஏழு மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும் என்று தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம் நாட்டில் இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வந்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள், ஆனால் தென் கொரியாவிலோ, இந்த சட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி 67 சதவிகிதத்துக்கும் மேலான தென் கொரிய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

ஒரு வேளை அலுவலகத்தில் கணிணியை அரசு உத்தரவு படி நிறுத்தினாலும், அதிக நேரம் வேலை பார்த்து பழகியவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லாப்டாப்பில் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து வருவார்கள் என்று தென் கொரிய மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.     

Saturday, 31 March 2018

அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா?


மெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா? இனி உங்கள் சமுக ஊடக கணக்குகள் குறித்த தகவல்களையும் சமர்பிக்க வேண்டும், அமெரிக்க அரசாங்கம் நேற்று வெளியிட்ட பெடரல் பதிவேட்டில் இந்த தகவல் வெளிடப்பட்டுள்ளது. செய்தி காணொளி காட்சி வடிவில்,  காணொளி காட்சி பிடித்திருந்தால் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 17 March 2018

குற்றவாளிகள் விமானம், ரயிலில் பயணிக்க தடை - சீன அரசு கொண்டு வரும் புதிய சட்டம்


சீனாவில் சமூக மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் சமூகத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 3 February 2018

கேப் டவுன் நகர மக்களை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்


லகம் வெப்பமயமாகி வருவதால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக உலகின் ஒரு சில பகுதிகளில் பெருமழை பொழிந்து வெள்ளம் வந்து மக்கள் அவதிபடுகின்றனர், மற்றொரு புறம் பல மாதங்களாக மழை பெய்யாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது,  

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் வசிக்கும் நான்கு மில்லியன் மக்கள் மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர், அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் ரேஷனில் உணவு பொருட்கள் வழங்குவது தண்ணீரை அளந்து வழங்க துவங்கி உள்ளது. இப்போது ஒரு குடும்பத்திற்கு ஐம்பது லிட்டர் என்ற அளவில் நகரமெங்கும் அமைக்கப்பட்டு உள்ள 200 தண்ணீர் வழங்கும் மையங்களில் வழங்கப்படும் தண்ணீர், அடுத்து வரும் வாரங்களில் தண்ணீரின் அளவு குறைக்கபட்டு ஒரு குடும்பத்திற்கு இருபத்தி ஐந்து லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் அங்கு வரும் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் அங்கு கையிருப்பில் இருக்கும் தண்ணீர் மொத்தமும் தீர்ந்து விடும் அபாய நிலை உருவாகி உள்ளது.   


அரசாங்கம் தினமும் அளந்து வழங்கும் தண்ணீரை ஷவர் பயன்படுத்தி குளிக்கவோ அல்லது தேவையில்லாமல் கழிப்பறையில் ஃபிளஷ் செய்து வீணாக்கவோ வேண்டாம் என்று நகரமெங்கும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கேப் டவுன் நகரில் விளையாட்டு போட்டிகளில் விளையாட வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கடுமையான தண்ணீர் சிக்கன கட்டுப்பாடுகள் பொருந்தும். இப்போதே அங்கும் வசிக்கும் மக்களுக்குள் ஒருவர் அதிகமாக தண்ணீர் பிடித்து விட்டார் என்று சொல்லி சண்டைகள் வர துவங்கி உள்ளது, அதனால் இனி வரும் காலங்களில் தண்ணீர் வழங்கும் மையங்களில் மக்களை கண்காணிக்க காவலர்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது. 
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 27 January 2018

உலக புகழ்பெற்ற பத்து பிரபலங்கள்


 மக்கள் மனதில் இடம்பிடித்த (எல்லா காலங்களிலும்) உலக புகழ்பெற்ற பத்து பிரபலங்களையும், அவர்களின் சிறப்புகளையும் காணொளி காட்சி வடிவில் தொகுத்து கொடுத்திருக்கிறோம், காணொளி காட்சி பிடித்திருந்தால்  டைம்ஸ் உலகம் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 20 January 2018

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்


லக அளவில் தனி நபர் வருமானம் மிக அதிகமாக உள்ள  டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் காணொளி காட்சி தொகுப்பாக வணிகர் டைம்ஸ் யூ டியுப் சானலில், காணொளி காட்சி பிடித்திருந்தால்  டைம்ஸ் உலகம் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டைம்ஸ் உலகம் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



சவூதி அரேபியா - தனி நபர் வருமானம் $56000
சுவிச்சர்லாந்து -  தனி நபர் வருமானம் $56000
அமெரிக்கா - தனி நபர் வருமானம் $57000
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருடத்துக்கு  $68000
நார்வே  - தனி நபர் வருமானம் $68000
குவைத் - தனி நபர் வருமானம் $72000
புருனே - தனி நபர் வருமானம் $80000
சிங்கப்பூர் - தனி நபர் வருமானம் $85000
லக்ஸம்பெர்க் -தனி நபர் வருமானம் $94000
கத்தார் - தனி நபர் வருமானம் $146000

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 13 January 2018

உலகை ஆளும் பத்து ஆபத்தான சர்வாதிகாரிகள்


ந்த சர்வாதிகாரிகள் பட்டியலில் சிலர் ஆட்சியில் இன்னும் தொடர்கிறார்கள், சிலர் இப்போது ஆட்சியில் இல்லை - இவர்கள் ஆட்சியில் (செய்த) செய்து கொண்டிருக்கும் அதிர்ச்சியளிக்கும் கொடூரமான செயல்களை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த காணொளி பதிவு. இது போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு துன்பம் விளைவிப்பதுடன், சுற்றியிருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாய் மாறி விடுகிறார்கள்.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 6 January 2018

உலகெங்கும் பனிமயம்

2018 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அணு ஆயுத பட்டன் விளையாட்டை துவங்கி உலக அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பி உள்ளனர், நாடாளும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சூட்டை கிளப்புகின்றனர்,   இயற்கையோ கடும் பனியை பொழிய செய்து மக்கள் வாழ்க்கையோடு விளையாட துவங்கியுள்ளது.  பல நாடுகளிலும் மக்கள் பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் மக்கள் கடும் பனியினால் பாதிக்கபட்டாலும் மறுபுறம் பனிப்பொழிவை நடுங்கி கொண்டே கொண்டாடவும் செய்கின்றனர். 

அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக அருவியியே 
உறைந்து போகும் அதிசய காட்சி 

சீனாவில் ஹர்பின் நகரில் பனி திருவிழா கொண்டாட்டம்

ஜெர்மனியின் பெர்லின் நகரிலும் பனி திருவிழா கொண்டாட்டம்

இந்தியா: ஹிமாச்சலில் பனியால் உறைந்த பிரஷார் ஏரி 
ஒரு பயணியின் பார்வை   

சிம்லாவில் பனிபொழிவு காட்சி 
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 30 December 2017

2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள்

2017ஆம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது, இந்த ஆண்டு நமக்கு தந்து சென்றுள்ள உலகை உலுக்கிய   பத்து   புகைப்படங்கள்   காணொளி காட்சியாக தொகுக்கப்பட்டுள்ளது..ஒவ்வொரு புகைப்படமும் சில மறக்க முடியாத சந்தோஷங்களையும்,       சோகங்களையும்     நமக்குள்     விதைத்து     விட்டு செல்கின்றன...  2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 22 December 2017

ஐந்து நாடுகளின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



சீனா
சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் வீடுகளிலும், கடை வீதிகளிலும் வண்ண வண்ண கலைநயமிக்க கிறிஸ்துமஸ் பேப்பர் வேலைப்பாடுகள், ட்ரீ ஆப் லைட் (ஒளி தரும் மரம்) என்ற பெயரில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பிரம்மாண்டமான வாணவேடிக்கைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து அருந்துவது என்று அந்த நாடே கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது.   

ஜப்பான் 
எழுபதுகளின் முற்பகுதியில் ஜப்பான் நாட்டில் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டில் கோழிகள் கிடைப்பது அரிதாகி விட்டது, ஜப்பானில் சிக்கன் உணவு வகைகள் கிடைக்கக்கூடிய ஒரே இடம் கேஎப்சி உணவகம்  என்றானது, அது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மாதமானதால் அந்த பழக்கம் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கேஎப்சி உணவகங்களில் சிக்கன் ஆர்டர் செய்து சிக்கனோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கமாக மாறிவிட்டது. 



இத்தாலி 
இத்தாலி நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 24ஆம் தேதி துவங்கி ஜனவரி ஆறாம் தேதி வரை பனிரெண்டு நாட்கள் கொண்டாடபடுகிறது, முக்கியமான நாளாக கருதப்படும் ஜனவரி ஆறாம் தேதி எப்பிஃபனி என்று அழைக்கபடுகிறது, அந்த நாளில் தான் குழந்தை இயேசுவுக்கு மூன்று சாஸ்திரிகள் பரிசுபொருட்கள் கொண்டு வந்து கொடுத்து பார்த்து சென்றதாக நம்பப்படுகிறது. மற்ற நாடுகளை போலவே பண்டிகையின் இறுதி நாளில் நள்ளிரவு ஜெபமும் நடைபெறுகிறது. 

ஆஸ்திரேலியா  
உலகிலேயே மிக நீண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா தான், இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் துவங்கி ஜனவரி 26ஆம் தேதி வரை ஆறு வாரங்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது, கடற்கரையோர நகரங்களுக்கு படையெடுக்கும் அந்நாட்டு மக்கள் மீன் பிடிப்பது, அசைவ உணவுகளை பார்பிக்கூ  முறையில் சமைத்து உண்பது என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்.   

ஆப்ரிக்கா
350 மில்லியன் கிறிஸ்தவ மக்கள் வாழும் பழம்பெருமை மிக்க ஆப்ரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ சபைகளில் ஆராதனைகளும், வசதி மிகுந்த கிறிஸ்தவர்கள் வசதியற்ற ஏழை மக்களுக்கு உணவு, உடைகள் தந்து அவர்கள் வறுமை போக்கி கிறிஸ்துமஸ் கொண்டாட வைக்கும் நாளாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் விளங்குகிறது. 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 15 December 2017

உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்

லகை உலுக்கிய 10 புகைப்படங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 10 புகைப்படங்ளில் சில புகைப்படங்கள் மனித வாழ்வின் கோரமான தருணங்களையும், சில புகைப்படங்கள் மனிதனின் இரக்க குணத்தையும் நமக்கு காண்பிக்கிறது. 

Saturday, 9 December 2017

தலைப்பு செய்தியாகும் இஸ்ரேல் தலைநகரம் - ஜெருசலேம்

இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேம் - அமெரிக்கா அங்கீகாரம்

லக நாடுகள் பல இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்க தயங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளார், இந்த முடிவை செயல்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகத்தை  டெல் அவிவ் நகரத்திலிருந்து  ஜெருசலேம் நகரத்துக்கு மாற்ற போவதாகவும் அறிவித்துள்ளார்.  ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் இரண்டுமே தங்களுடையது என்று கருதி வரும் நிலையில், இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். முன்பு, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண ஐ.நா. அறிவுறுத்தியிருந்தது. 



ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின் இஸ்ரேல் பாலஸ்தீனம் எல்லையில் பதற்றம்
ஸ்ரேல் பாலஸ்தீன எல்லை பகுதியான மேற்கு காசா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.  கடந்த வெள்ளிகிழமை இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் திரளாக ஒன்று கூடி ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் டிரம்ப் உருவப்படத்தை தீயிட்டு எரித்ததை தடுக்க முயன்ற ராணுவத்தினர் மீது  தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ராணுவத்தினர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்  முடிவுக்கு அரபு நாடுகளின் தலைவர்களும், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீக் கூட்டமைப்பின் தலைவர் அகமது அப்துல், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி முயற்சிகள் பாதிக்கப்பட்டு ஸ்திரமற்ற நிலை ஏற்படும். வன்முறை பெருகும். அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் “அமெரிக்காவின் இந்த முடிவை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அமைதி முயற்சிகளை அமெரிக்கா சீர்குலைத்து விட்டது” என்று கூறியுள்ளார். லெபனான், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.



இஸ்ரேல் - பாலஸ்தீனம் - வரலாறு சொல்லும் உண்மைகள்

டந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கும்  அரபு நாடுகளுக்கும் நடந்த மத்திய கிழக்கு போரில் மேற்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதி ஜோர்டான் வசம் இருந்தது. பின்பு, 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் வந்தது, ஒட்டுமொத்த ஜெருசலேம் நகரத்தையும் தங்கள் கடடுப்பாட்டுக்குள்  கொண்டு வந்து விட்டதால் இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனின் தலைநகராக இருக்கும் என்று கூறி வந்தனர். இஸ்ரேலின் அறிவிப்பை ஏற்காத அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் தங்கள் நாட்டு  தூதரகங்களை இஸ்ரேல் நாட்டின்  டெல் அவிவ் நகரிலேயே செயல்பட செய்தன.  கடந்த காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையே நடந்தது என்ன? உண்மை வரலாறு சொல்லும் காணொளி காட்சி


ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில் ஜெருசலேம் நகரம்

ழம்பெருமைமிக்க ஜெருசலேம் நகரம் ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில்....