Saturday 3 February 2018

கேப் டவுன் நகர மக்களை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்


லகம் வெப்பமயமாகி வருவதால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக உலகின் ஒரு சில பகுதிகளில் பெருமழை பொழிந்து வெள்ளம் வந்து மக்கள் அவதிபடுகின்றனர், மற்றொரு புறம் பல மாதங்களாக மழை பெய்யாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது,  

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் வசிக்கும் நான்கு மில்லியன் மக்கள் மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர், அங்கு நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் ரேஷனில் உணவு பொருட்கள் வழங்குவது தண்ணீரை அளந்து வழங்க துவங்கி உள்ளது. இப்போது ஒரு குடும்பத்திற்கு ஐம்பது லிட்டர் என்ற அளவில் நகரமெங்கும் அமைக்கப்பட்டு உள்ள 200 தண்ணீர் வழங்கும் மையங்களில் வழங்கப்படும் தண்ணீர், அடுத்து வரும் வாரங்களில் தண்ணீரின் அளவு குறைக்கபட்டு ஒரு குடும்பத்திற்கு இருபத்தி ஐந்து லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் அங்கு வரும் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் அங்கு கையிருப்பில் இருக்கும் தண்ணீர் மொத்தமும் தீர்ந்து விடும் அபாய நிலை உருவாகி உள்ளது.   


அரசாங்கம் தினமும் அளந்து வழங்கும் தண்ணீரை ஷவர் பயன்படுத்தி குளிக்கவோ அல்லது தேவையில்லாமல் கழிப்பறையில் ஃபிளஷ் செய்து வீணாக்கவோ வேண்டாம் என்று நகரமெங்கும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கேப் டவுன் நகரில் விளையாட்டு போட்டிகளில் விளையாட வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கடுமையான தண்ணீர் சிக்கன கட்டுப்பாடுகள் பொருந்தும். இப்போதே அங்கும் வசிக்கும் மக்களுக்குள் ஒருவர் அதிகமாக தண்ணீர் பிடித்து விட்டார் என்று சொல்லி சண்டைகள் வர துவங்கி உள்ளது, அதனால் இனி வரும் காலங்களில் தண்ணீர் வழங்கும் மையங்களில் மக்களை கண்காணிக்க காவலர்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது. 
--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்