Monday 9 September 2019

டிவிட்டரில் இஸ்ரோவை தட்டி கொடுத்த நாசா


ந்தியாவின் நிலவுப் பயணமான சந்திராயன்-2 குறித்து கடந்த சனிக்கிழமையன்று நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ நிலவுக்கு சந்திராயன்-2 என்ற ராக்கெட் அனுப்பி அதில் இருந்து விக்ரம் லேண்டர் சாதனத்தை நிலவில் இறக்க முயற்சி செய்தபோது, நிலவின் தென் துருவத்திற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் சாதனத்திலிருந்து கட்டுபாட்டு மையத்திற்கு வந்த சிக்னல்கள் தொடர்பு நின்று போனது, இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கண்ணீர் விட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான சிவன் அவர்களை நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கட்டித்தழுவி அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில்: "விண்வெளி என்பது கடினமானது, நிலவின் தென்துருவத்தில் இறங்க முயற்சி செய்த இஸ்ரோவின் சந்திராயன் 2  பயணத்தை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியாவின் விண்வெளி பயணம் எங்களுக்கு உற்சாகமூட்டுகிறது. மேலும் வருங்காலத்தில் நமது சூரிய மண்டலத்தை நாம் ஒன்றிணைந்து ஆராய வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்." என்றும் அந்த டிவீட்டில் நாசா தெரிவித்துள்ளது.


நாசா மட்டுமல்ல, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகமான State_SCA டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில்: "# சந்திரயான் 2 இல் அளப்பரிய  முயற்சிகளுக்காக @ISRO ஐ வாழ்த்துகிறோம். இந்த பயணம் இந்தியாவுக்கு ஒரு பெரிய முன்னேற்ற படியாகும், மேலும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஊக்கம் தரும் மதிப்புமிக்க தரவைத் தொடர்ந்து தயாரிக்கும். இந்தியா தனது விண்வெளி அபிலாஷைகளை எட்டும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. AGW"  என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகெங்கும் இருந்து இஸ்ரோவின் நிலவுப் பயணமான சந்திராயன்-2 முயற்சியை ஊக்குவித்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில்  விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ள இஸ்ரோ மீண்டும் விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் தொடர்பை பெற தொடர்ந்து முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
--------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்