Friday 22 December 2017

ஐந்து நாடுகளின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



சீனா
சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் வீடுகளிலும், கடை வீதிகளிலும் வண்ண வண்ண கலைநயமிக்க கிறிஸ்துமஸ் பேப்பர் வேலைப்பாடுகள், ட்ரீ ஆப் லைட் (ஒளி தரும் மரம்) என்ற பெயரில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பிரம்மாண்டமான வாணவேடிக்கைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து அருந்துவது என்று அந்த நாடே கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது.   

ஜப்பான் 
எழுபதுகளின் முற்பகுதியில் ஜப்பான் நாட்டில் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டில் கோழிகள் கிடைப்பது அரிதாகி விட்டது, ஜப்பானில் சிக்கன் உணவு வகைகள் கிடைக்கக்கூடிய ஒரே இடம் கேஎப்சி உணவகம்  என்றானது, அது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மாதமானதால் அந்த பழக்கம் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கேஎப்சி உணவகங்களில் சிக்கன் ஆர்டர் செய்து சிக்கனோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கமாக மாறிவிட்டது. 



இத்தாலி 
இத்தாலி நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 24ஆம் தேதி துவங்கி ஜனவரி ஆறாம் தேதி வரை பனிரெண்டு நாட்கள் கொண்டாடபடுகிறது, முக்கியமான நாளாக கருதப்படும் ஜனவரி ஆறாம் தேதி எப்பிஃபனி என்று அழைக்கபடுகிறது, அந்த நாளில் தான் குழந்தை இயேசுவுக்கு மூன்று சாஸ்திரிகள் பரிசுபொருட்கள் கொண்டு வந்து கொடுத்து பார்த்து சென்றதாக நம்பப்படுகிறது. மற்ற நாடுகளை போலவே பண்டிகையின் இறுதி நாளில் நள்ளிரவு ஜெபமும் நடைபெறுகிறது. 

ஆஸ்திரேலியா  
உலகிலேயே மிக நீண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா தான், இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் துவங்கி ஜனவரி 26ஆம் தேதி வரை ஆறு வாரங்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது, கடற்கரையோர நகரங்களுக்கு படையெடுக்கும் அந்நாட்டு மக்கள் மீன் பிடிப்பது, அசைவ உணவுகளை பார்பிக்கூ  முறையில் சமைத்து உண்பது என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்.   

ஆப்ரிக்கா
350 மில்லியன் கிறிஸ்தவ மக்கள் வாழும் பழம்பெருமை மிக்க ஆப்ரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ சபைகளில் ஆராதனைகளும், வசதி மிகுந்த கிறிஸ்தவர்கள் வசதியற்ற ஏழை மக்களுக்கு உணவு, உடைகள் தந்து அவர்கள் வறுமை போக்கி கிறிஸ்துமஸ் கொண்டாட வைக்கும் நாளாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் விளங்குகிறது. 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்