Saturday 7 April 2018

தென் கொரியா அலுவலகங்களில் ஏழு மணிக்கு கணிணியை நிறுத்த அரசு உத்தரவு


நேரங்காலம் தெரியாமல் கடுமையாக உழைக்கும் (வேலை பார்க்கும்) மக்கள் நிறைய பேர் தென் கொரியாவில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தென் கொரியர்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் 2,739 மணி நேரம் செலவிடுவது தெரிய வந்துள்ளது, இது வளர்ந்த நாடுகளில் இருக்கும் வேலை நேரத்தை விட கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு ஆயிரம் மணி நேரம் அதிகமாக உள்ளது.    

தென் கொரியர்களின் கடமை உணர்ச்சியை படிப்படியாக கட்டுபடுத்த தென் கொரிய அரசாங்கம் மூன்று கட்டமாக புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக, கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் அலுவலகங்களில் வெள்ளிகிழமைகளில் இரவு எட்டு மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிகிழமைகளில் இரவு ஏழு முப்பது மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும், இறுதி கட்டமாக வரும் மே மாதம் முதல் வெள்ளிகிழமைகளில் இரவு ஏழு மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும் என்று தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம் நாட்டில் இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வந்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள், ஆனால் தென் கொரியாவிலோ, இந்த சட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி 67 சதவிகிதத்துக்கும் மேலான தென் கொரிய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

ஒரு வேளை அலுவலகத்தில் கணிணியை அரசு உத்தரவு படி நிறுத்தினாலும், அதிக நேரம் வேலை பார்த்து பழகியவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லாப்டாப்பில் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து வருவார்கள் என்று தென் கொரிய மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.