Saturday 21 October 2017

சூழ்ந்து வரும் போர் மேகங்கள், மூன்றாம் உலக (அணு ஆயுத) போருக்கான தொடக்கமா?

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த நேரத்திலும் அணு ஆயுத போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.  



வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அளித்த பேட்டியில் எந்த நேரத்திலும் அணு ஆயுதபோர் மூளும் என்றும், நினைத்து கூட பார்த்திராத மோசமான அழிவை அமெரிக்கா சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளார் 

வட கொரியா அதிபரின் இந்த மிரட்டலுக்கு பின்பு: "அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க தயாராய் இருக்க வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் ஏற்படகூடிய விளைவுகளை குறித்து சிந்திக்காமல் வட கொரியாவுடன் யுத்தத்தில் இறங்குவோம் என்பது மிகவும் ஆபத்தானது அன்று ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்திலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் ஒருவரை ஒருவர் முட்டாள் என்று பொருள்படும்படியான வார்த்தைகளால் திட்டி கொண்டு வார்த்தை யுத்தத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வட கொரியாவால் எதாவது அச்சுறுத்தல் ஏற்படுமானால் வட கொரியா தேசத்தை முழுமையாக அழித்து நாசம் பண்ணுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை செய்திருந்தார். இது ஏதோ அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையேயான போர் என்று எடுத்து கொள்ள முடியாது, ரஷ்யா, சீனா, ஜப்பான் என்று வரிசையாக எல்லா நாடுகளும் யுத்தத்தில் இறங்க வேண்டியதாகி விடும், மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி உள்ளது. போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஏற்படும் அழிவுகளை ஏற்கெனவே இரண்டாம் உலக போரின் போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் நரகமாய் மாறி போனதை உலக மக்கள் எல்லோரும் நன்கு உணர்ந்துள்ளனர். அன்று பயன்படுத்தியதை பார்க்கிலும் ஐந்து மடங்கு அதிக சக்தியுள்ள ஹைட்ரஜன் குண்டுகளை தன் வசம் வைத்திருக்கும் வட கொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து வருகிறது.

ஒரு காலத்தில் வட கொரியா நாட்டின் (கணினி) சைபர் திறன் குறித்து கேலி செய்து வந்த காலம் போய் இப்போது அந்த நாட்டின் சைபர் திறனை பார்த்து உலக நாடுகள் அஞ்சும் வகையில் வளர்ந்துள்ளது. வட கொரியாவை பொறுத்த வரை சக்தி வாய்ந்த ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வைத்திருந்தாலும், அதன் விமான படை பலம் அமெரிக்காவுடன் ஒப்பிடும் அளவுக்கு பலம் வாய்ந்ததாக இல்லை, ஆனாலும் சமீபத்தில் வட கொரியா பரிசோதனை செய்த கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டின் மேல் பறந்தது அந்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தி வரும் ஹைட்ரஜன் குண்டு சோதனைகள், ஏவுகணை சோதனைகள் மூலம் வட கொரியா அமெரிக்க அதிபரை சீண்டி வருகிறது. தென் கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா நடத்தி வரும் போர் பயிற்சிகள், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஐநா சபை வட கொரியா மீது விதித்திருக்கும் பொருளாதார தடைகள் என்று நடக்கும் சம்பவங்கள் எல்லாம் வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்ஐ சீண்டி பார்க்கும் விதத்திலேயே உள்ளது. இரண்டு நாட்டின் அதிபர்களுமே பொறுமையின்றி பதிலுக்கு பதில் அதிரடியாக பேசி வருவது எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற அச்சத்தையே ஏற்படுத்தி வருகிறது. 

 இதுவரை போரில் அணு ஆயுதங்களால் விளைந்த அழிவுகளை விளக்கும் காணொளி காட்சி
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்