2017ஆம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது, இந்த ஆண்டு நமக்கு தந்து சென்றுள்ள உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள் காணொளி காட்சியாக தொகுக்கப்பட்டுள்ளது..ஒவ்வொரு புகைப்படமும் சில மறக்க முடியாத சந்தோஷங்களையும், சோகங்களையும் நமக்குள் விதைத்து விட்டு செல்கின்றன... 2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு
Saturday, 30 December 2017
2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள்
Friday, 22 December 2017
ஐந்து நாடுகளின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சீனா
சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் வீடுகளிலும், கடை வீதிகளிலும் வண்ண வண்ண கலைநயமிக்க கிறிஸ்துமஸ் பேப்பர் வேலைப்பாடுகள், ட்ரீ ஆப் லைட் (ஒளி தரும் மரம்) என்ற பெயரில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், பிரம்மாண்டமான வாணவேடிக்கைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து அருந்துவது என்று அந்த நாடே கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது.
ஜப்பான்
எழுபதுகளின் முற்பகுதியில் ஜப்பான் நாட்டில் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டில் கோழிகள் கிடைப்பது அரிதாகி விட்டது, ஜப்பானில் சிக்கன் உணவு வகைகள் கிடைக்கக்கூடிய ஒரே இடம் கேஎப்சி உணவகம் என்றானது, அது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மாதமானதால் அந்த பழக்கம் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கேஎப்சி உணவகங்களில் சிக்கன் ஆர்டர் செய்து சிக்கனோடு கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கமாக மாறிவிட்டது.
இத்தாலி
இத்தாலி நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 24ஆம் தேதி துவங்கி ஜனவரி ஆறாம் தேதி வரை பனிரெண்டு நாட்கள் கொண்டாடபடுகிறது, முக்கியமான நாளாக கருதப்படும் ஜனவரி ஆறாம் தேதி எப்பிஃபனி என்று அழைக்கபடுகிறது, அந்த நாளில் தான் குழந்தை இயேசுவுக்கு மூன்று சாஸ்திரிகள் பரிசுபொருட்கள் கொண்டு வந்து கொடுத்து பார்த்து சென்றதாக நம்பப்படுகிறது. மற்ற நாடுகளை போலவே பண்டிகையின் இறுதி நாளில் நள்ளிரவு ஜெபமும் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா
உலகிலேயே மிக நீண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா தான், இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு டிசம்பர் இறுதி வாரம் துவங்கி ஜனவரி 26ஆம் தேதி வரை ஆறு வாரங்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது, கடற்கரையோர நகரங்களுக்கு படையெடுக்கும் அந்நாட்டு மக்கள் மீன் பிடிப்பது, அசைவ உணவுகளை பார்பிக்கூ முறையில் சமைத்து உண்பது என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர்.
ஆப்ரிக்கா
350 மில்லியன் கிறிஸ்தவ மக்கள் வாழும் பழம்பெருமை மிக்க ஆப்ரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ சபைகளில் ஆராதனைகளும், வசதி மிகுந்த கிறிஸ்தவர்கள் வசதியற்ற ஏழை மக்களுக்கு உணவு, உடைகள் தந்து அவர்கள் வறுமை போக்கி கிறிஸ்துமஸ் கொண்டாட வைக்கும் நாளாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் விளங்குகிறது.
Friday, 15 December 2017
உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்
உலகை உலுக்கிய 10 புகைப்படங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 10 புகைப்படங்ளில் சில புகைப்படங்கள் மனித வாழ்வின் கோரமான தருணங்களையும், சில புகைப்படங்கள் மனிதனின் இரக்க குணத்தையும் நமக்கு காண்பிக்கிறது.
Saturday, 9 December 2017
தலைப்பு செய்தியாகும் இஸ்ரேல் தலைநகரம் - ஜெருசலேம்
இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேம் - அமெரிக்கா அங்கீகாரம்
உலக நாடுகள் பல இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்க தயங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளார், இந்த முடிவை செயல்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரத்திலிருந்து ஜெருசலேம் நகரத்துக்கு மாற்ற போவதாகவும் அறிவித்துள்ளார். ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் இரண்டுமே தங்களுடையது என்று கருதி வரும் நிலையில், இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். முன்பு, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண ஐ.நா. அறிவுறுத்தியிருந்தது.
ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின் இஸ்ரேல் பாலஸ்தீனம் எல்லையில் பதற்றம்
இஸ்ரேல் பாலஸ்தீன எல்லை பகுதியான மேற்கு காசா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த வெள்ளிகிழமை இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் திரளாக ஒன்று கூடி ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் டிரம்ப் உருவப்படத்தை தீயிட்டு எரித்ததை தடுக்க முயன்ற ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ராணுவத்தினர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவுக்கு அரபு நாடுகளின் தலைவர்களும், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீக் கூட்டமைப்பின் தலைவர் அகமது அப்துல், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி முயற்சிகள் பாதிக்கப்பட்டு ஸ்திரமற்ற நிலை ஏற்படும். வன்முறை பெருகும். அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் “அமெரிக்காவின் இந்த முடிவை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அமைதி முயற்சிகளை அமெரிக்கா சீர்குலைத்து விட்டது” என்று கூறியுள்ளார். லெபனான், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் - வரலாறு சொல்லும் உண்மைகள்
கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கும் அரபு நாடுகளுக்கும் நடந்த மத்திய கிழக்கு போரில் மேற்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதி ஜோர்டான் வசம் இருந்தது. பின்பு, 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் வந்தது, ஒட்டுமொத்த ஜெருசலேம் நகரத்தையும் தங்கள் கடடுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனின் தலைநகராக இருக்கும் என்று கூறி வந்தனர். இஸ்ரேலின் அறிவிப்பை ஏற்காத அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் தங்கள் நாட்டு தூதரகங்களை இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட செய்தன. கடந்த காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையே நடந்தது என்ன? உண்மை வரலாறு சொல்லும் காணொளி காட்சி
ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில் ஜெருசலேம் நகரம்
பழம்பெருமைமிக்க ஜெருசலேம் நகரம் ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில்....
Saturday, 2 December 2017
சென்ற வார உலகம்
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்கா நாட்டின் எந்த பகுதியையும் குறி வைத்து தாக்க கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை அதிக சக்தி வாய்ந்த ஹவாசாங்-15 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, 4,475 கிலோமீட்டர் உயரம் வானில் பறந்து 53 நிமிடங்களில் 960 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் விழுந்த இந்த ஏவுகணை இதற்கு முன்பு வட கொரியா பரிசோதித்த எல்லா ஏவுகணைகளை பார்க்கிலும் அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹவாசாங்-15 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததின் மூலம் வட கொரியா ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை அந்நாடு அடைந்து விட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. அமெரிக்காவை சீண்டும் விதத்தில் வட கொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனை குறித்து "நாங்கள் இதை கவனித்து கொள்வோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் வந்தால் வட கொரியா முழுவதும் அழியும் - வட கொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வட கொரியா நாட்டின் ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், வட கொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவை சீண்டும் விதத்தில் தொடர்ந்து வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு குழுவின் அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே, "அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில், வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான, வட கொரியாவின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, வட கொரியாவுக்கு தக்க பதிலடி தர வேண்டும். அனைத்து நாடுகளும், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உட்பட, வட கொரியாவுடனான அனைத்து வகை வர்த்தக தொடர்புகளையும் நிறுத்த வேண்டும். வட கொரியாவின் மிரட்டல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் பயப்படாது. வட கொரியாவின் இது போன்ற நடவடிக்கைகளால், போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது, அப்படி போர் ஏற்பட்டால், வட கொரியா முழுவதும் அழியும் நிலை உருவாகும். என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா எரிமலை வெடிப்பு
இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் உள்ள மவுண்ட் அகுங் எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்ததை அடுத்து அந்நாட்டு அரசு எரிமலைக்கு அருகே தங்கியிருந்த கிராம மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர். எரிமலையில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்த சர்வதேச விமான நிலையம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு கடந்த புதன் கிழமை விமானங்கள் பறக்க தகுந்த நிலை வந்த பிறகு மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப்
வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள போப் மியான்மர் நாட்டிலிருந்து இராணுவ அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை சந்தித்தார். முன்னதாக, மியான்மர் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது ரோஹிங்கியா அகதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் தவிர்த்து விட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் சர்ச்சை எழுப்பி வந்த நிலையில் வங்கதேசத்தில் போப் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது உலக நாடுகள் ரோஹிங்கியா அகதிகள் படும் துன்பங்கள் குறித்து அக்கறையின்றி இருப்பது குறித்து வருத்தம் தெரிவத்த அவர் அதற்காக உலக நாடுகளை ரோஹிங்கியா மக்கள் மன்னிக்கும்படியும் கேட்டு கொண்டார்.
இந்த மாதம் வெளிவரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பு
டிசம்பர் மாதம் வெளிவர உள்ள புத்தம்புதிய ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பை கீழே உள்ள காணொளி காட்சி தொகுப்பில் காணலாம்.
Subscribe to:
Posts (Atom)