Tuesday 10 October 2017

வடக்கு கலிபோர்னியாவில் பற்றியெரியும் காட்டு தீ

வடக்கு கலிபோர்னியாவில் பற்றியெரியும் காட்டு தீயால் இதுவரை 13 பேர் 
இறந்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நூற்றுக்கும் 
அதிகமானவர்களை காணவில்லை மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் 
காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த  ஞாயிற்றுகிழமை இரவு மின்னல் தாக்குதலால் காட்டு மரங்களை
பற்றிய தீ,  காற்றும் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வீசியதால் 
மளமளவென்று பரவி இதுவரை  1500 -க்கும் மேற்பட்ட கட்டிடங்களையும்,  
115,000 ஏக்கருக்கும் மேல் நிலபரப்பைபும் அழித்துள்ளது, 

சாண்டா ரோசா, கலிபோர்னியா காட்டு தீக்கு முன்னரும் பின்னரும்:

24 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு 
படையினரும், கலிபோர்னியா வனத்துறை ஊழியர்களும் இப்போது காற்றின் 
வேகம் சற்று குறைந்திருப்பதால் விரைவில் நிலைமையை கட்டுக்குள் 
கொண்டு வந்துவிடலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். 
நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் 
கலிபோர்னியா மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன் தீ பற்றியெரியும் ஐந்து 
மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார், அமெரிக்க அதிபர் 
டொனால்ட் டிரம்ப் இந்த விபத்தை பெரும் இயற்கை பேரிடராக அறிவிக்க 
உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்