Saturday 28 October 2017

சென்ற வார உலகம்


ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே மீண்டும் தேர்வு 

 ஜப்பான் நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஷின்ஷோ அபே மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார், அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஷின்ஷோ அபேக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் வட கொரியாவுக்கு எதிரான ஜப்பானின் செயல்பாடுகள் இன்னும் தீவிரம் அடையும் என்று தெரிகிறது.



ரஷ்ய ஏவுகணை சோதனை 

சாத்தான் -2 என்று அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பாய்ந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணை உட்பட நான்கு ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதில் சாத்தான் -2 என்று அழைக்கப்படும் RS-12M ஏவுகணை 16 அணு ஆயுதங்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஒரு முறை இதனை யுத்தத்தில் பயன்படுத்தினால் ஒரு கண்டமே உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய் விட கூடிய அபாயம் உள்ளது.


இந்தோனேசியா பட்டாசு ஆலையில் தீ விபத்து 

இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் பற்றிய தீயில் சிக்கி 47 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர், இந்த விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பெண் தொழிலாளர்கள் என்றும், மருத்துவமனைகளில் தீகாயத்துடன் சேர்க்கப்பட்ட பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் இந்தோனேசியாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


சி ஜின்பிங் - மா சே துங் கிற்கு  பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்
- சீன அரசாங்கம்  அறிவிப்பு 

சீன அரசாங்கம் மா சே துங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக சி ஜின்பிங்-ஐ அறிவித்துள்ளது. இரண்டு முறை சீனாவின்  அதிபராக பதவி வகித்துள்ள சீன அதிபர் சி ஜின்பிங் மிக சிறந்த கம்யுனிஸ்ட் தலைவராக உருவெடுத்துள்ளார், அவரது சோசியலிச கொள்கைகளும், கருத்துக்களும் அந்நாட்டு பல்கலைகழக பாட நூல்களிலும் இடம் பெற இருக்கிறது.

பறக்கும், நீந்தும் ரோபோ - ரோபோபீ - ஹாவர்ட் பல்கலைகழக கண்டுபிடிப்பு

 கணினி கண்டுபிடிக்கப்பட்ட போது அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் போன்று தெரிந்தது, பின்பு மெல்ல மெல்ல அளவு குறைந்து கொண்டே போய் பர்சனல் கம்ப்யுட்டர், மடிகணினி என்று இப்போது கணினியில் செய்யும் எல்லா வேலைகளையும் கையடக்க ஸ்மார்ட் போனில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதே கதை இப்போது ரோபோக்களிலும் நடக்க துவங்கியுள்ளது, மிக சிறிய வடிவத்தில் ரோபோக்கள் இப்போது உருவாக்கி வருகின்றனர். ஹாவர்ட் பல்கலைகழகம் உருவாக்கியுள்ள ரோபோபீ என்ற ரோபோ வானில் பறக்கும், நீரில் மிதக்கும், நீந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 21 October 2017

சூழ்ந்து வரும் போர் மேகங்கள், மூன்றாம் உலக (அணு ஆயுத) போருக்கான தொடக்கமா?

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த நேரத்திலும் அணு ஆயுத போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.  



வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அளித்த பேட்டியில் எந்த நேரத்திலும் அணு ஆயுதபோர் மூளும் என்றும், நினைத்து கூட பார்த்திராத மோசமான அழிவை அமெரிக்கா சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளார் 

வட கொரியா அதிபரின் இந்த மிரட்டலுக்கு பின்பு: "அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க தயாராய் இருக்க வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் ஏற்படகூடிய விளைவுகளை குறித்து சிந்திக்காமல் வட கொரியாவுடன் யுத்தத்தில் இறங்குவோம் என்பது மிகவும் ஆபத்தானது அன்று ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்திலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் ஒருவரை ஒருவர் முட்டாள் என்று பொருள்படும்படியான வார்த்தைகளால் திட்டி கொண்டு வார்த்தை யுத்தத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வட கொரியாவால் எதாவது அச்சுறுத்தல் ஏற்படுமானால் வட கொரியா தேசத்தை முழுமையாக அழித்து நாசம் பண்ணுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை செய்திருந்தார். இது ஏதோ அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையேயான போர் என்று எடுத்து கொள்ள முடியாது, ரஷ்யா, சீனா, ஜப்பான் என்று வரிசையாக எல்லா நாடுகளும் யுத்தத்தில் இறங்க வேண்டியதாகி விடும், மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி உள்ளது. போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஏற்படும் அழிவுகளை ஏற்கெனவே இரண்டாம் உலக போரின் போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் நரகமாய் மாறி போனதை உலக மக்கள் எல்லோரும் நன்கு உணர்ந்துள்ளனர். அன்று பயன்படுத்தியதை பார்க்கிலும் ஐந்து மடங்கு அதிக சக்தியுள்ள ஹைட்ரஜன் குண்டுகளை தன் வசம் வைத்திருக்கும் வட கொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து வருகிறது.

ஒரு காலத்தில் வட கொரியா நாட்டின் (கணினி) சைபர் திறன் குறித்து கேலி செய்து வந்த காலம் போய் இப்போது அந்த நாட்டின் சைபர் திறனை பார்த்து உலக நாடுகள் அஞ்சும் வகையில் வளர்ந்துள்ளது. வட கொரியாவை பொறுத்த வரை சக்தி வாய்ந்த ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வைத்திருந்தாலும், அதன் விமான படை பலம் அமெரிக்காவுடன் ஒப்பிடும் அளவுக்கு பலம் வாய்ந்ததாக இல்லை, ஆனாலும் சமீபத்தில் வட கொரியா பரிசோதனை செய்த கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டின் மேல் பறந்தது அந்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியா தொடர்ந்து நடத்தி வரும் ஹைட்ரஜன் குண்டு சோதனைகள், ஏவுகணை சோதனைகள் மூலம் வட கொரியா அமெரிக்க அதிபரை சீண்டி வருகிறது. தென் கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா நடத்தி வரும் போர் பயிற்சிகள், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஐநா சபை வட கொரியா மீது விதித்திருக்கும் பொருளாதார தடைகள் என்று நடக்கும் சம்பவங்கள் எல்லாம் வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்ஐ சீண்டி பார்க்கும் விதத்திலேயே உள்ளது. இரண்டு நாட்டின் அதிபர்களுமே பொறுமையின்றி பதிலுக்கு பதில் அதிரடியாக பேசி வருவது எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற அச்சத்தையே ஏற்படுத்தி வருகிறது. 

 இதுவரை போரில் அணு ஆயுதங்களால் விளைந்த அழிவுகளை விளக்கும் காணொளி காட்சி
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 13 October 2017

உலகின் எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் பயணம்

சோதனைகள் தான் சாதனைக்கு வழி வகுக்கும், தான் வாழ்வில் வெற்றி பெற எடுத்த தொழில் முயற்சிகள் பலவற்றில் தோல்விகளை சந்தித்த மனிதர் தான் எலான் மஸ்க், சில வருடங்களுக்கு முன் மனிதர்களை நிலவுக்கு ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்து அதை  செயல்படுத்த முயற்சியெடுத்து வருகிறார், இவரது சமீபத்திய சாதனை முயற்சி மனிதர்களை உலகின் எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் பயணிக்க வைப்பது தான். இப்போது இந்த திட்டம் குறித்த காணொளி காட்சி இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மணிக்கு 18000 மைல்கள்  வேகத்தில் செல்லும் பிக் பால்கன் ராக்கெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் மீண்டும் மீண்டும் (reusable) பயன்படுத்தபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 உலகின் எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் பயணிக்க வடிவமைக்கப்படும் ராக்கெட்


பூமியிலிருந்து விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களுக்கு பயணிக்க ராக்கெட்

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 10 October 2017

வடக்கு கலிபோர்னியாவில் பற்றியெரியும் காட்டு தீ

வடக்கு கலிபோர்னியாவில் பற்றியெரியும் காட்டு தீயால் இதுவரை 13 பேர் 
இறந்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நூற்றுக்கும் 
அதிகமானவர்களை காணவில்லை மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் 
காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த  ஞாயிற்றுகிழமை இரவு மின்னல் தாக்குதலால் காட்டு மரங்களை
பற்றிய தீ,  காற்றும் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வீசியதால் 
மளமளவென்று பரவி இதுவரை  1500 -க்கும் மேற்பட்ட கட்டிடங்களையும்,  
115,000 ஏக்கருக்கும் மேல் நிலபரப்பைபும் அழித்துள்ளது, 

சாண்டா ரோசா, கலிபோர்னியா காட்டு தீக்கு முன்னரும் பின்னரும்:

24 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு 
படையினரும், கலிபோர்னியா வனத்துறை ஊழியர்களும் இப்போது காற்றின் 
வேகம் சற்று குறைந்திருப்பதால் விரைவில் நிலைமையை கட்டுக்குள் 
கொண்டு வந்துவிடலாம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். 
நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் 
கலிபோர்னியா மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன் தீ பற்றியெரியும் ஐந்து 
மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார், அமெரிக்க அதிபர் 
டொனால்ட் டிரம்ப் இந்த விபத்தை பெரும் இயற்கை பேரிடராக அறிவிக்க 
உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 
--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 7 October 2017

சூதாட்ட நகரத்தில் சுடப்பட்ட மக்கள்

அமெரிக்காவை அதிர வைத்த   கொடூர   துப்பாக்கி  சூடு தாக்குதல்: 

அமெரிக்காவில் சூதாட்டம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பேர் பெற்ற 

நகரமாய் திகழும் லாஸ் வேகாசில் ஒரு இசை திருவிழாவின் போது நடந்த

துப்பாக்கி சூட்டில் குறைந்தது  59 பேர் இறந்துள்ளனர் ஐநூறுக்கும் 

மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர், 64 வயதான ஸ்டீபன் படாக் என்பவன் 

இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகிலிருந்த  ஒரு ஓட்டலின்  32வது 

மாடியிலிருந்து துப்பாகியால் மக்கள் கூட்டத்தை குறி வைத்து இந்த 

தாக்குதலை நடத்தி விட்டு தன்னையும் சுட்டு கொண்டு இறந்துள்ளான். என்ன 

நோக்கத்திற்காக   இந்த கொடிய செயலில் அவன்   ஈடுபட்டான்  என்பது 

தெரியவில்லை,       இந்த   தாக்குதல்   இசை   நிகழ்ச்சி  நடந்த   போது 

நிகழ்த்தபட்டதால் மக்கள் துப்பாக்கியால் சுடும் சத்தத்தை இசை நிகழ்ச்சியில் 

வரும் சத்தம் அன்று துவக்கத்தில் நினைத்துள்ளனர் ஆனால் ஐந்து 

நிமிடத்திற்கும் மேல் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்கவே அதிர்ச்சியடைந்து 

கலைந்து ஓடியுள்ளனர். 



பெருகி வரும் துப்பாக்கி கலாசாரம்: அமெரிக்க தேசத்தின் வரலாற்றில்

 இப்படிப்பட்ட துப்பாக்கி சூடு - வன்முறை சம்பவங்கள் நடப்பது இது முதல்

முறையல்ல, கடந்த காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் அமெரிக்க

தேசத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது, அப்படிப்பட்ட சம்பவங்களின்

தொகுப்பை கீழே உள்ள கானொளியில்:



இப்படிபட்ட சம்பவங்கள் நிகழும் இடத்தில சிக்கிகொண்டால் உங்களை தற்காத்து கொள்வது எப்படி என்று விளக்கும் காணொளி காட்சி: