Saturday 2 December 2017

சென்ற வார உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை 
மெரிக்கா நாட்டின் எந்த பகுதியையும் குறி வைத்து தாக்க கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை அதிக சக்தி வாய்ந்த  ஹவாசாங்-15 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, 4,475 கிலோமீட்டர் உயரம் வானில் பறந்து 53 நிமிடங்களில் 960 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் விழுந்த இந்த ஏவுகணை இதற்கு முன்பு வட கொரியா பரிசோதித்த எல்லா ஏவுகணைகளை பார்க்கிலும் அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹவாசாங்-15 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததின் மூலம் வட கொரியா ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை அந்நாடு அடைந்து விட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. அமெரிக்காவை சீண்டும் விதத்தில் வட கொரியா  நடத்திய இந்த ஏவுகணை சோதனை குறித்து "நாங்கள் இதை கவனித்து கொள்வோம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  


போர் வந்தால் வட கொரியா முழுவதும் அழியும் - வட கொரியாவுக்கு அமெரிக்கா  எச்சரிக்கை 

ட கொரியா நாட்டின் ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், வட கொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவை சீண்டும் விதத்தில் தொடர்ந்து வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து  ஐ.நா. பாதுகாப்பு குழுவின் அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே, "அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில், வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான, வட கொரியாவின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, வட கொரியாவுக்கு தக்க பதிலடி தர வேண்டும். அனைத்து நாடுகளும், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உட்பட, வட கொரியாவுடனான அனைத்து வகை வர்த்தக தொடர்புகளையும் நிறுத்த வேண்டும். வட கொரியாவின் மிரட்டல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் பயப்படாது. வட கொரியாவின் இது போன்ற நடவடிக்கைகளால், போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது, அப்படி போர் ஏற்பட்டால், வட கொரியா முழுவதும் அழியும் நிலை உருவாகும். என்று தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியா எரிமலை வெடிப்பு 

ந்தோனேசியா நாட்டின்   பாலி தீவில் உள்ள மவுண்ட் அகுங் எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்ததை அடுத்து அந்நாட்டு அரசு எரிமலைக்கு அருகே தங்கியிருந்த கிராம மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியிலிருந்து  வெளியேறி விட்டனர். எரிமலையில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்த சர்வதேச விமான நிலையம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு கடந்த புதன் கிழமை விமானங்கள் பறக்க தகுந்த நிலை வந்த பிறகு மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 


வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப்
ங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள போப் மியான்மர் நாட்டிலிருந்து இராணுவ அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய  ரோஹிங்கியா அகதிகளை சந்தித்தார். முன்னதாக, மியான்மர் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது ரோஹிங்கியா அகதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் தவிர்த்து விட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் சர்ச்சை எழுப்பி வந்த  நிலையில் வங்கதேசத்தில் போப் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது உலக நாடுகள் ரோஹிங்கியா அகதிகள் படும் துன்பங்கள் குறித்து அக்கறையின்றி இருப்பது குறித்து வருத்தம் தெரிவத்த அவர் அதற்காக உலக நாடுகளை ரோஹிங்கியா மக்கள் மன்னிக்கும்படியும் கேட்டு கொண்டார். 


இந்த மாதம் வெளிவரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பு

டிசம்பர் மாதம் வெளிவர உள்ள புத்தம்புதிய ஸ்மார்ட்போன்களின் அணிவகுப்பை கீழே உள்ள காணொளி காட்சி தொகுப்பில் காணலாம்.